மாணவர்கள், பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மாணவர்கள், பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் Hindu கோப்பு படம்

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக பொதுசுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை 100 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் முழுமையாக செயல்பட உள்ளதால், மாணவர்கள் அமரும் இருக்கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. 1 கோடி மாணவ-மாணவியர் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களுக்கு கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு கைகள் தூய்மை செய்யப்படுவது உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இன்று அனைத்து பள்ளி ஆசிரியர்கள் குழு ஏற்பாடு செய்து வருகிறது.

இதனிடையே, பள்ளிகள் மற்றும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 2 டோஸ் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திருக்க வேண்டும் என்றும் பள்ளிகளில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் கூட்டமாக அமர வேண்டாம் என்றும் ஆசிரியர்களும், மாணவர்களும் நாள் முழுவதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் 2 முறை கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் வகுப்பறை நுழையும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கரோனா பரிசோதனை செய்திருந்தால் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in