மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகேதாட்டு அணை கட்டப்படும்... கர்நாடக துணை முதல்வர் திட்டவட்டம்!

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில அரசு தெரிவித்து வருகிறது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் 60 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் 9,000 கோடி செலவில் அணை கட்ட முடிவு செய்த கர்நாடக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அனுப்பியுள்ள போதிலும் மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

மேகேதாட்டு
மேகேதாட்டு

மேகேதாட்டு அணை கட்டினால் தமிழகத்திற்கு சுத்தமாக தண்ணீரே வராது எனக் கூறி அதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனாலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு தொடர்ந்து மேகேதாட்டு அணையை ஆதரித்து பேசி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகேதாட்டு திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பாஜக ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகேதாட்டு திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும்.

ராகுல் காந்தி சிவக்குமார் சித்தராமையா
ராகுல் காந்தி சிவக்குமார் சித்தராமையா

அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகேதாட்டு திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது. மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்றி சாதனை படைப்பதே எனது கனவு. அந்த அணையை கட்டுவதற்காகவே நான் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன்” என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in