திருச்சியில் தங்கியிருக்க வேண்டும்: ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

திருச்சியில் தங்கியிருக்க வேண்டும்: ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த மாதம் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திமுக பிரமுகர் நரேஷை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது தேர்தல் விதிகளை மீறியது மற்றும் தொழிற்சாலை ஆக்கிரமிப்பு என 2 வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயக்குமார் தொடர்ந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் தரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in