‘இன்னும் 6 நாட்களுக்கே நிலக்கரி கையிருப்பு’: மின்விநியோகம் குறித்து அமைச்சர் புதுத்தகவல்

‘இன்னும் 6 நாட்களுக்கே நிலக்கரி கையிருப்பு’: மின்விநியோகம் குறித்து அமைச்சர் புதுத்தகவல்

“தமிழகத்தில் இன்னும் 6 நாட்களுக்கே நிலக்கரி கையிருப்பு உள்ளது” என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கரூரில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ மழையின் காரணமாக கடந்த 2 நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது; 2 மணிநேரம் மட்டுமே காற்றாலை மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கும் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் மின் உற்பத்தி வீணாவதைத் தடுத்து உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் 6 நாட்களுக்கே நிலக்கரி கையிருப்பு உள்ளது. மின்வாரியத்தின் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் என்ற நிலையை அடையும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in