16 ஆண்டுகள் கழித்து பிறந்த சிம்பன்சிக்குப் பிறந்தநாள் விழா!-வண்டலூரில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

16 ஆண்டுகள் கழித்து பிறந்த சிம்பன்சிக்குப் பிறந்தநாள் விழா!-வண்டலூரில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த சின்பன்சி குரங்கு ஜோடி ஒன்று 16 ஆண்டுகள் கழித்து குட்டியை ஈன்றெடுத்தது. அதன் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.

சிம்பன்சி இன குரங்குகள் மனிதனோடு நெருக்கமான உறவைக் கொண்டவை. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இந்த சிம்பன்சி குரங்குகளைக் காணச் சிறுவர்கள் ஆர்வத்துடன் வருவார்கள். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்குக் கடந்த 2005ம் ஆண்டு 29 வயதான கொம்பி மற்றும் 24 வயதான கௌரி என ஒரு ஜோடி சிம்பன்சி குரங்குகள் கொண்டு வரப்பட்டன. இந்த சிம்பன்சி ஜோடிக்கு 16 ஆண்டுகள் கழித்தே குட்டி பிறந்தது. இதையடுத்து அதற்கு ஆதித்யா என வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினர் பெயர் சூட்டினார்கள்.

ஆதித்யா பிறந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி அதற்கு நேற்று கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழா துணை இயக்குநர் டாக்டர் ஆர்.காஞ்சனா அவர்களின் தலைமையில், பார்வையாளர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் விருந்தின் ஒரு பகுதியாகச் சிம்பன்சிகளுக்கு மிகவும் பிடித்தமான உறைய வைத்த பழ கேக் வழங்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in