வாழைப்பழம் தொண்டையில் சிக்கியது: ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

வாழைப்பழம் தொண்டையில் சிக்கியது: ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

திண்டுக்கல் மாவட்டத்தில், வாழைப்பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தையின் தொண்டையில் வாழைப்பழம் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு சாப்பிட வாழைப்பழம் கொடுத்தனர். இந்நிலையில் குழந்தையின் தெத்துப் பல்களில் கடிபட்டு ஒரு துண்டு வாழைப்பழம் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டது. இதில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து தன் ஒன்றரை வயது மகனை அழைத்துக்கொண்டு சாகுல் ஹமீது, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டைக்குழியில் பழம் சிக்கி, மூச்சுத்திணறி குழண்டை உயிர் இழந்திருப்பதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைப்பழம் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், ‘குழந்தைகளுக்கு இரண்டு வயதுவரை வாழைப்பழமே கொடுத்தாலும் அதை தங்கள் கையாலேயே கூழாக்கி, சிதைத்துக் கொடுக்க வேண்டும். பொதுவாக பழம் இவ்வளவு ஆபத்தானது அல்ல. இது அரிய நிகழ்வு. இனி பெற்றோர் வாழைப்பழத்தை நேரடியாக குழந்தைகள் கையில் கொடுக்காமல், அவர்களே கொடுக்க வேண்டும். ஒருவேளை குழந்தைகளே நேரடியாக சாப்பிட்டால் அவர்களை உடன் இருந்து பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in