அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் மரணம்... கலங்கிய மு.க.ஸ்டாலின்!

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

சென்னையில் உயிரிழந்த அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் ஜெயக்குமாரின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்
அஞ்சலி செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்

திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் ஜெயக்குமார். சாதாரண தொண்டர்கள் முதல் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரிடமும் அன்பாக பழகி நெருக்கம் காட்டக் கூடியவர் ஜெயக்குமார். தேர்தல் நேரங்களில் இவரது பணி மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கும்.  விருப்ப மனு வாங்குவது முதல் அதனைப் பரிசீலித்து தகுதி வாரியாக தகவல்களைத் திரட்டி தலைமை கழக நிர்வாகிகளுக்கு அளிப்பது வரை அனைத்தும் இவரது கண்காணிப்பிலேயே நடைபெறும். 

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்து அறிவாலயத்தில் பணியாற்றி வருவதால் கடைக்கோடி திமுக தொண்டர்கள் வரை அனைவருக்கும் ஜெயக்குமாரை நன்கு தெரியும். கருணாநிதிக்கும் நல்ல நண்பராக இருந்தார். தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கும் மிக நெருக்கமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமார் இன்று அதிகாலை மருத்துவமனையில் மரணம் அடைந்தார்

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

இதையடுத்து அவரது உடல்  சென்னை நந்தனத்தில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டு உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மரணச் செய்தி கேட்டு திமுக தொண்டர்கள், தலைவர்கள் ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அறிவாலயத்தின் துணை மேலாளரும் தனது நெருங்கிய நண்பருமான ஜெயக்குமார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபைக்கு செல்ல வேண்டிய நிலையிலும் கூட, முன்னதாக புறப்பட்டுச் சென்று, நேரில்  அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்களும் உடன் சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in