தீயணைப்புத்துறை ஆபீசில் திடீர் ஆய்வு... காவலர் குடியிருப்புக்கு விசிட்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி

தீயணைப்புத்துறை ஆபீசில் திடீர் ஆய்வு... காவலர் குடியிருப்புக்கு விசிட்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி

உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பை ஆய்வு செய்ததோடு, அங்கு குடியிருப்போரிடம் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் இன்று மாலை 5.40 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமசந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த விமானத்தில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் வந்திருந்தார். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக தேனி சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று, தேனி, திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

முன்னதாக மதுரையிலிருந்து தேனியில் நடைபெறும் விழாவிற்கு செல்லும் வழியில் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொது நாட்குறிப்புப் பதிவேடு, தீ விபத்து மற்றும் பிற விபத்துப் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் அலுவலகத்தில் இருந்த சைலேந்திர பாபுவால் திறந்து வைக்கப்பட்ட கட்டிடம் என்பதால் கட்டிடத்தில் உள்ள கல்வெட்டின் அருகே நின்று புகைப்படம் எடுத்துவிட்டு தேனி நோக்கி சென்றார். இந்த ஆய்வின் போது சைலேந்திர பாபு உடனிருந்தார். பின்னர் ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பை ஆய்வு செய்த முதல்வர், அங்கு குடியிருப்போரிடம் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in