அபுதாபி முதலீட்டாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

ரூ.3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
அபுதாபி முதலீட்டாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அபுதாபியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

4 நாள் அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் செய்துள்ளார். துபாயில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்று பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து அபுதாபியில் முதலீட்டாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, ரூ.3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, அபுதாபி முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்திய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முதலீடு 41.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சக புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. நாடடின் அந்திய முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்களிப்பும் 5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கட்டுமானம், ஆட்டோ மொபைல் துறையில் அதிக முதலீடு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.