`அன்பால் நனைந்தேன், நெகிழ்ந்தேன்'- முதல்வர் மு.க.ஸ்டாலின்

`அன்பால் நனைந்தேன், நெகிழ்ந்தேன்'- முதல்வர் மு.க.ஸ்டாலின்

"டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது அன்பால் என்னை நனையச் செய்துவிட்டனர். தலைவர் கலைஞரின் ஓவியத்தை ஆசிரியை ஒருவர் வழங்கியபோது, நெகிழ்ந்தேன்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட சில அமைச்சர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது, கோரிக்கை மனுக்களை முதல்வர் அவர்களிடம் கொடுத்தார். இந்நிலையில், 2-வது நாளான இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.

இதன் பின்னர், டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இதையடுத்து, கேஜ்ரிவாலுடன் சேர்ந்து மு.க.ஸ்டாலின் அரசு பள்ளியை பார்வையிட்டார். அப்போது, அரசு பள்ளியில் செய்யப்பட்டுள்ள நவீன வசதிகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். பள்ளிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் இன்று பள்ளியைப் பார்வையிட்டபோது, அங்கு மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் பிசினஸ் பிளாஸ்டர்ஸ் (Business Blasters) முன்னெடுப்பைக் கண்டு மகிழ்ந்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது அன்பால் என்னை நனையச் செய்துவிட்டனர். தலைவர் கலைஞரின் ஓவியத்தை ஆசிரியை ஒருவர் வழங்கியபோது, நெகிழ்ந்தேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.