`என் வாழ்வில் மறக்க முடியாத பஸ் 29சி'- திடீரென பேருந்தில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்

`என் வாழ்வில் மறக்க முடியாத பஸ் 29சி'- திடீரென பேருந்தில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் அரசு பேருந்தில் திடீரென பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார் முதல்வர் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து தனது காரில் சென்னை மெரினாவை நோக்கி முதல்வர் சென்று கொண்டிருந்தார். அப்போது, நான் அரசு பேருந்தில் பயணிக்கிறேன் என்று காரில் இருந்த துரைமுருகனிடம் கூறிய முதல்வர் ஸ்டாலின், ஆர்.கே.சாலையில் வந்து கொண்டிருந்த 29சி பேருந்தில் ஏறினார். இதனை சற்றும் எதிர்பாராத பயணிகள் ஆச்சரியப்பட்டதோடு, மகிழ்ச்சியடைந்தனர். அப்போது, பெண்களிடம் இலவச பயணம் குறித்து கேட்டறிந்தார்.

அவர்கள் மிகவும் பயனுள்ளதாக கூறினர். இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் தலைமைச் செயலக வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்வராய் ஓராண்டு; முதன்மையாய் நூறாண்டு காப்போம் என்று வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு சாதனை புத்தகத்தை வெளியிட்டார். திமுக ஆட்சியில் மாதம் தோறும் செய்த சாதனைகளை 12 புத்தகங்களாக முதல்வர் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, அவர், தலைவர் கலைஞரின் நினைவிடத்துக்கு செல்வதற்காக காரில் வந்தபோது அரசு பேருந்தில் ஏறினார். அந்த பேருந்து 29 சி. என் வாழ்வில் மறக்க முடியாதது 29சி பேருந்து. அந்த பேருந்தில் பயணித்ததுதான் நான் பள்ளிக்கு சென்று வந்தேன்.

அந்த வழித்தட பேருந்தில் இன்று நான் ஆய்வு செய்தது மகிழ்ச்சி. அந்த பேருந்தில் இன்று பொதுமக்களுடன் பயணம் செய்து அவர்களிடம் கலந்துரையாடினேன். மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் குறித்து 3 வழித்தடங்களில் 465 பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் மூலம் 600 ரூபாய் முதல்வர் 1020 ரூபாய் வரை பெண்களுக்கு மிச்சமாகிறது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in