முதல் 3 இடங்களை பிடித்த பட்டு விவசாயிகள்: பரிசு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

முதல் 3 இடங்களை பிடித்த பட்டு விவசாயிகள்: பரிசு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

2021-22-ம் ஆண்டிற்கான பட்டுவளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், மாநிலத்தில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும் என்றும், மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும், இதற்காக 24 லட்சத்துக்கு 45 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், தரமான பட்டு நூல் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயும், இரண்டாவது பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கிட 4.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளும், மாநில அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளும், மூன்று சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளர்களும் மற்றும் மூன்று சிறந்த பலமுறை பட்டு நூற்பாளர்களும் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி, மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பா.சின்னனுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கா.பூபாலகிருஷ்ணனுக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செ.கமலத்திற்கும்,

மாநில அளவில் சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரா.பெருமாளுக்கும், இரண்டாம் பரிசு 75 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ச.சேகருக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ.ராம்சங்கருக்கும்,

மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மு.ஜெயவேலுக்கு, இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ.வேதவள்ளிக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.வெங்கடாஜலபதிக்கும் என மொத்தம் 6.75 லட்சத்துக்கான பரிசுத் தொகையினை 9 விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

Related Stories

No stories found.