உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

உக்ரைனில் மருத்துவப் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். இதன் பின்னர் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் நெல்லை மாவட்டம், ஜோதிபுரத்தில் உக்ரைனில் மருத்துவப் பட்டப்படிப்பு படித்து வரும் நிவேதிதா, திவ்யபாரதி, ஹரிணி, நவநீத ஸ்ரீராம் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

அப்போது, தங்களை உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக மீட்டு, தாயகம் திரும்பிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட தமிழக அரசிற்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உடனிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in