டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்: நாளை பிரதமருடன் சந்திப்பு

டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்: நாளை பிரதமருடன் சந்திப்பு

3 நாள் பயணமாக இன்று இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்துவைப்பதோடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

டெல்லியில் தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுக அலுவலகம் கட்ட 2013-ம் ஆண்டில் இடம் ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அண்ணா, கலைஞர் அறிவாலயம் என பெயரிடப்பட்டுள்ள டெல்லி அலுவலகத்தை ஏப்ரல் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதற்காக பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய அரசியல் கட்சிகள் தலைவர்களுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து பேச உள்ளார்.

அப்போது, நீட் விலக்கு மசோதா மற்றும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்கக் கோருதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் முன்வைக்க உள்ளார்.

அதன்பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது, நெடுஞ்சாலைப் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் எம்.பி ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு முதல்வர் டெல்லி திரும்புகிறார்.

Related Stories

No stories found.