துபாயில் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியை ரசித்த முதல்வர் ஸ்டாலின்

துபாயில் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியை ரசித்த முதல்வர் ஸ்டாலின்

துபாய் கண்காட்சியில் நடந்த தமிழ்நாட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்பட அரசு அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.

துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் உலக அளவிலான எக்ஸ்போ 2020 கண்காட்சி நடைபெற்று வருகிறது. 5 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் தமிழ்நாடு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தளத்தில் வரும் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வாரம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய அரங்கை பார்வையிட்டு தமிழ்நாடு தளத்தை திறந்து வைத்தார். கண்காட்சியை காண வந்திருந்த அயலகத் தமிழர்கள், முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கண்காட்சியில் நடந்த தமிழ்நாட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்பட அரசு அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.