பயணிகளுக்கு குட் நியூஸ்... கோடைவிடுமுறைக்காக சென்னை - நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில்கள்!

சிறப்பு ரயில்கள்
சிறப்பு ரயில்கள்

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. எனவே இந்த இரண்டு மாதங்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய பலரும் திட்டமிட்டுள்ளனர். இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை- நாகர்கோவில் இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாகர்கோவிலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வரும் 21-ந் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06019) மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மற்றும் வரும் 22 ஆகிய தேதிகளில் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06020) மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

ரயில்
ரயில்

இதேபோல, நாகர்கோவிலில் இருந்து வரும் 14, 28 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06021) மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வரும் 15, 29 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) மதியம் 3.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06022) மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் / ரயில் பயணிகள்
சிறப்பு ரயில்கள் / ரயில் பயணிகள்

சென்னை- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் சென்னை செண்ட்ரலிருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, நெல்லை ஆகிய நிறுத்தங்களில் நின்று நாகர்கோவில் சென்றடையும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in