சென்னை உயர் நீதிமன்றம் 24 மணி நேரத்திற்கு மூடல்! காரணம் என்ன?

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 7 வாயில்களும் இன்று ஒரு நாள் மூடப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய கட்டிடமான சென்னை உயர் நீதிமன்றம் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் கட்டப்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் நீதிமன்ற வளாகத்தையே வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

150 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதற்காக வருடத்திற்கு ஒரு நாள் உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, சாவி கோயிலில் வைக்கப்படும். இந்த பாரம்பரிய நடைமுறையானது இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், வளாகத்தின் வழிப்பாதைகளை மக்கள் வருங்காலத்தில் உரிமை கோரிவிடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மூடப்படும் என்று அறிவித்தது.

இந்த நடைமுறையானது ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கபட்டு வருகிறது. அதன்படி நீதிமன்ற வளாக வாயில்கள் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மூடப்படுகின்றன என்று உயர் நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் நகல் அனைத்து வாயில்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த 24 மணி நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்குள் அரசு துறையினர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் என யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in