நடைமேடை மீது ஏறிய மின்சார ரயில்: அதிர்ந்துபோன பயணிகள்

கோப்பு படம்
கோப்பு படம்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் ஒன்று தடம் புரண்டு தண்டவாளத்தைவிட்டு நடை மேடையில் ஏறி நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடை மேடை மீது ஏறி நிற்கும் ரயில்
நடை மேடை மீது ஏறி நிற்கும் ரயில்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்படி இயக்குவதற்காக மாலை 4.30.மணியளவில் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்தை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது.

தாம்பரத்திற்குச் செல்லும் ரயில்கள் முதலாவது நடைமேடையில் இருந்தே புறப்படும் என்பதால் முதலாவது நடைமேடையை நோக்கியே அந்த ரயில் வந்துகொண்டிருந்தது.

அப்படி வந்துகொண்டிருந்த ரயில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது பலத்த சத்தத்துடன் மோதியதுடன் நிற்காமல் அதன் மேல் ஏறி நின்றது. அந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததாலும், நடைமேடையில் அதிக பயணிகள் இல்லாததாலும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ரயிலைக் கட்டுப்படுத்த முடியாததால் ரயிலில் இருந்து ரயில் ஓட்டுநர் சங்கர் குதித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் லேசான காயம் அடைந்துள்ளார்.

ரயிலில் பிரேக் பிடிக்கவில்லை என்று ரயில்வே தரப்பில் முதல்கட்டத் தகவலாகச் சொல்லப்படுகிறது. இந்த விபத்து காரணமாக தற்போது தாம்பரம் செல்லும் ரயில் சேவை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அதைச் சரிசெய்யும் முயற்சியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in