`என்னை விடுதலை செய்யுங்கள்'- 30 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் சாந்தன் ஆளுநருக்கு கடிதம்

`என்னை விடுதலை செய்யுங்கள்'- 30 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் சாந்தன் ஆளுநருக்கு கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் சாந்தன் தன்னை விடுதலை செய்ய கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 7 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயுள் கைதிகளாக 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி விடுதலையை பெற்றார். இதனிடையே, தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சாந்தன் கடிதம் இன்று கடிதம் எழுதியுள்ளார். சிறைத்துறை மூலம் இந்த கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்ட சாந்தன், வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in