‘அடுத்த 3 மணி நேரத்துக்கு வெளியில் போக வேண்டாம் மக்களே’ - 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

‘அடுத்த 3 மணி நேரத்துக்கு வெளியில் போக வேண்டாம் மக்களே’ - 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில், 'சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு நல்ல மழை பெய்யும். இதேபோல் புதுக்கோட்டை, சிவகங்கை, காரைக்கால், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்தில் மிதமான மழை பெய்யும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் இராமநாதபுரம் மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி கோயிலில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கோயில் சுற்றுப்பிரகாரத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து மோட்டார் பம்ப் செட் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in