தமிழகத்தில் வரும் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் வரும் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் வரும் நான்கு நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தில் இன்றும், நாளையும் ராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 27ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28ம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

வரும் 29ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இந்த 4 நாட்களில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைப்பொழிவு இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in