தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்தக் கோடையில் வெப்பம் மிக கடுமையாக உயர்ந்திருக்கிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்குத் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும், மற்ற மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 29 ம் தேதி அன்று டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.