தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிக்கையில், “வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

இதேபோல் காரைக்காலில் ஓருசில இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் ஒருசிலப் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

இதேபோல் வரும் 8-ம் தேதி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in