`சொத்து வரியை உயர்த்தினால்தான் நிதி தருவோம் என்றது மத்திய அரசு'

அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
`சொத்து வரியை உயர்த்தினால்தான் நிதி தருவோம் என்றது மத்திய அரசு'

"சொத்து வரியை மாற்றி அமைத்தால்தான் உள்ளாட்சி நிதி விடுவிக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியதால்தான் வரி உயர்த்தப்பட்டது" என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "அதிக சொத்து இருப்பவர்களுக்கே அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏழைகளை பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல நகரங்களில் சென்னை, கோவையைவிட 100 சதவீதத்திற்கு மேல் அதிக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தான் சொத்து வரி குறைவாக உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. சொத்து வரியை மாற்றி அமைத்தால்தான் உள்ளாட்சி நிதி விடுவிக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியதால்தான் வரி உயர்த்தப்பட்டது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in