சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை நீக்கக் கோரிய வழக்கு; இருவேறு தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள்!

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்
Updated on
2 min read

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்ககோரிய வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக, இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை. சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல், தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி முன்னிலையில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, "சவுக்கு சங்கர் மீது சட்டத்திற்கு உட்பட்டுதான் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் எதுவும் இல்லை" என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 மாதத்தில் சட்டத்திற்கு உட்பட்டு நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

பின்னர், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்கினர். "குண்டர் சட்டர் ரத்து செய்யப்படுவதற்கான அனைத்து முகாந்திரங்களும் உள்ளது. அதனால் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யப்படுகிறது" என்று நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். பின்னர் மற்றொரு நீதிபதி பாலாஜி, "காவல்துறையின் விளக்கத்தைக் கேட்க வேண்டி இருப்பதால், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது" என தீர்ப்பளித்தார். இவ்வாறான நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in