
மயிலாடுதுறையில் தீபாவளியை முன்னிட்டு மக்களைக் கவரும் வகையில் கடை ஒன்று புஸ்வானம், சங்கு சக்கரம், மத்தாப்பு அணுகுண்டு வடிவங்களில் கேக் மற்றும் இனிப்புகளைத் தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஐயங்கார் பேக்கரியில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. அங்கு குழந்தைகளைக் கவரும் முயற்சியாக பட்டாசு மற்றும் வாண வேடிக்கை மாதிரிகளில் கேக் மற்றும் இனிப்புகளை உருவாக்கி வைத்துள்ளனர்.
இனிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மெகா சைஸ் சங்கு சக்கரம், 15 கிலோவில் தயார் செய்யப்பட்ட அணுகுண்டு மில்க் ஸ்வீட், 30 கிலோ எடையில் கேக் கொண்டு செய்யப்பட்ட புஸ்வானம், ராக்கெட் போன்ற இனிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இவற்றை பெற்றோருடன் வரும் குழந்தைகள் ஆர்வமுடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
மேலும் குழந்தைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஓமம் கலந்த குச்சி பிஸ்கட், பட்டர் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட் மற்றும் எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் வகைள் என நூற்றுக்கணக்கான இனிப்புகள் மிட்டாய் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வீட்டுமுறை பலகாரங்களான தினை, சாமை, வரகில் தயாரிக்கப்பட்ட அதிரசம், கருப்பு உளுந்து உருண்டை, கெட்டி உருண்டை, ரவா உருண்டை, கோதுமை மாவு உருண்டை என்று பல்வேறு பாரம்பரிய இனிப்புகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு, வீட்டிற்குத் தேவையான அளவு இனிப்பு மற்றும் பலகார வகைகள் தங்களுக்குக் கிடைப்பதாலும், நேரம் மிச்சமாவதாலும் தங்களுக்கு இது போன்ற ரெடிமேட் இனிப்பு பலகார வகைகள் மிகவும் உதவியாக இருப்பதாக கூறும் இல்லத்தரசிகள் இதனை அதிக அளவில் வாங்கிச் சென்று தீபாவளியை கொண்டாடி மகிழ தயாராகி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்