பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயார்!: முதல்வரை கைகாட்டும் அமைச்சர் சிவசங்கர்

பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயார்!: முதல்வரை கைகாட்டும் அமைச்சர் சிவசங்கர்

பேருந்திற்கான கட்டண உயர்வு பட்டியல் அரசு அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தமிழக முதல்வர் இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பால், பேருந்து, மின் கட்டணம் உயர இருப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, முதல்வர் மக்களைப் பாதிக்காத அளவிற்கு முடிவெடுப்பார்'' என சூசகமாக பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் பெரம்பலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ தொலைதூர பேருந்திற்கான கட்டண உயர்வு பட்டியல் அரசு அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு விட்டது. ஆந்திரா, கேரள அரசு பேருந்துகளில் தொலைதூர பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து அதனை வைத்து இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துக் கழகம் 48,500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து தமிழக முதல்வர் இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in