விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை இடையே பாலம்!

அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு
விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை இடையே பாலம்!
விவேகானந்தர் பாறை

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்கப்பட உள்ளது. இதை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் எழுதிய 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை வைத்தார் மறைந்த முதல்வர் கருணாநிதி. விவேகானந்தர் பாறைக்கு மிக அருகிலேயே திருவள்ளுவருக்கு இன்னொரு பாறையில் சிலை வைக்கப்பட்டது. ஆனால் விவேகானந்தர் பாறைக்கு மிக எளிதாக படகில் சென்றுவிட முடியும். ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும்பகுதியில் கடல்நீர் மட்டம் ஒரே சீராக இருப்பது இல்லை. அடிக்கடி கடல்நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவிடுவதால் படகு கடல் பாறைகளில் தட்டும் அபாயம் இருப்பதால் அங்கு படகு சேவை வருடத்தின் பெரும்பகுதி நாள்கள் இயங்குவதில்லை.

இந்நிலையில் தான் இந்த நிலையினைப் போக்க விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை இடையே பாலம் கட்ட முடிவுசெய்யப்பட்டது. இதற்கென, 27.96 கோடி செலவில் கடல்சார் நடைபாலம் அமைக்கப்படுகிறது.

குமரி கடற்கரையில் ஆய்வு செய்யும் எ.வ.வேலு
குமரி கடற்கரையில் ஆய்வு செய்யும் எ.வ.வேலு

இந்தப்பாலம் அமைய உள்ள பகுதியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2000வது ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி குமரி கடற்கரையில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அதிகபட்சமே இதுவரை 300 நாள்கள் மட்டுமே படகுப் போக்குவரத்து விடப்பட்டிருக்கும்! இப்படியான சூழலில் பாலம் அமைத்து வள்ளுவரை எப்போதும் பார்க்கும் வாய்ப்பு இதன் மூலம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in