“நீட் தேர்வுக்கு போட்ட முடிச்சை பாஜகவே அவிழ்க்கும்” -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்
மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

“நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவர் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன். நீட் தேர்வுக்கு பாஜக போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள்” என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு அவசியமில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை கூறியிருந்தார். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கல்வித் திறன் அதிகம் உள்ளது என சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பேட்டியளித்திருந்தார். மாணவர்களுக்கு கல்வித் திறன் அதிகமாக உள்ளதால், நீட் தேர்வை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க அண்ணாமலை கோரியிருந்தார். நீட் தேர்வுக்கு பாஜக போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள்.

நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவர் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன். தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்க்கின்றனர். டெல்டா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பில் 4 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் மருத்துவமனையை நாடி வருகின்றனர். ஆக்சிஜன் தேவை 5 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 350 பேர் டெல்டா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பில் உள்ளனர். 26 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி 67 சதவீதம் மட்டுமே உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதம் உயர்ந்திருக்கிறது” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in