கார்- அரசு பேருந்து நேருக்கு மோதல்; பாஜக நிர்வாகி உயிரிழப்பு: காயத்துடன் தப்பிய மனைவி!

கார்- அரசு பேருந்து நேருக்கு மோதல்; பாஜக நிர்வாகி உயிரிழப்பு: காயத்துடன் தப்பிய மனைவி!

சாலை விபத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் உயிரிழந்தார். இச்சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசப்பாண்டியன். இவர் பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்துவந்தார். அந்தப்பகுதியில் பாஜகவின் வளர்ச்சிக்கும் பெரும் உழைப்பைச் செலுத்தி வந்தார். நேற்று மாலை கதிரேசப் பாண்டியனும், அவரது மனைவி ராமலெட்சுமியும் உறவினர் வீட்டு விசேசத்திற்கு செல்ல மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை கதிரேசப் பாண்டியனே ஓட்டினார்.

தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் சென்றபோது தேனியில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த அரசுப்பேருந்து மீது கார் நேருக்கு, நேராக மோதியது. இதில் கதிரேசப் பாண்டியன், அவரது மனைவி ராமலெட்சுமி இருவருமே படுகாயம் அடைந்தனர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாஜக நிர்வாகி கதிரேசப் பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் பாஜக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in