மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கவும் தயார்; ஆனால்... நடிகை ரஞ்சனா பரபரப்பு தகவல்!

மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கவும் தயார்; ஆனால்... நடிகை ரஞ்சனா பரபரப்பு தகவல்!

நான் அடித்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க தயார். வேண்டுமானால் அவருடைய பெற்றோர் என்னை அடித்துக் கொள்ளட்டும் என நடிகை ரஞ்சனா தெரிவித்துள்ளார்.

சென்னை குன்றத்தூர் போரூர் இடையே அரசு பேருந்தில் தொங்கிய படி பயணம் சேர்ந்த மாணவர்களை அடித்து அவர்களை பேருந்தில் இருந்து அதிரடியாக இறக்கிவிட்டார் நடிகை ரஞ்சனா.

இவர் மாணவர்களை அடித்து, கண்டக்டரை அவதூறாக பேசிய வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு அன்றைய தினமே ஜாமீனில் வெளியே வந்தார். இதுகுறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான ரஞ்சனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: என்னை கைது செய்ததற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் நடிகர் சங்கம் சார்பாக யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. மற்ற மாநிலங்களில் ஒரு நடிகையை தவறாக பேசியதற்கு நம் தமிழகத்தில் நிறைய நடிகர், நடிகைகள் பொங்கி எழுந்ததை பார்த்துள்ளோம். என் தனிப்பட்ட விஷயத்தை நான் தட்டி கேளுங்கள் என சொல்லவில்லை. பொதுமக்கள் தொடர்பான விவகாரம், இதை தட்டி கேட்கலாம். சினிமாவில் மட்டும் பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது என்றில்லை. நிஜ வாழ்க்கையிலும் பொது மக்கள் பிரச்சினைகளை தட்டி கேட்க வேண்டும்.

நடிகை ரஞ்சனா
நடிகை ரஞ்சனா

நான் அந்த மாணவர்களின் உயிரை காக்கவே அடித்தேன். இதற்காக நான் அந்த மாணவர்களிடமும் அவர்களுடைய பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் நான் தயார். என் வீட்டுக்கு வந்து கூட அடித்துவிட்டு போகட்டும். இல்லாவிட்டால் அந்த பேருந்துக்கே வருகிறேன். அங்கு வந்தும் அவர்கள் அடித்துவிட்டு போகட்டும். நல்லது செய்ததற்கு எப்படி எல்லாம் அரசியலாக்க வேண்டும் என்ற நோக்கத்தை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். இதற்கெல்லாம் ஃபுல்ஸ்டாப் வைக்க வேண்டும். இந்த சிஸ்டம் மாறும் வரை நான் விட மாட்டேன். அதையும் உறுதியாக சொல்கிறேன். நான் பாஜக நிர்வாகி என்பதால் இப்படி செய்கிறார்கள். தன்னுடன் இருப்போர் மீது பொய் வழக்குகள் பாயும் என அண்ணாமலையே சொல்லியிருக்காரே. இது ஆரம்பம்தான். மேலும் நிறைய நடக்கும்.

கைது செய்யப்பட்ட ரஞ்சனா நாச்சியார்
கைது செய்யப்பட்ட ரஞ்சனா நாச்சியார்

தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும். தமிழகத்தில் எல்லா பேருந்துகளிலும் புட்போர்டு அடிக்காத மாதிரி தானியங்கி கதவுகளை வைக்க வேண்டும். அது வரை நான் ஓய மாட்டேன். குரல் கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன். விரைவில் தமிழகத்தில் கதவு, ஜன்னல்கள் மூடியபடி பேருந்துகள் இயங்கும். அதற்கான ஆரம்ப புள்ளியாக பாஜகவை சேர்ந்த நான் இருப்பேன்” என ரஞ்சனா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in