பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து ஆட்டோ கட்டணமும் உயர்கிறது!

கட்டணங்களை மாற்றியமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து ஆட்டோ கட்டணமும் உயர்கிறது!

"பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்" என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என கடந்த 2013-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தக் கோரி வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது எனவும் அதன் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மீட்டர் பொருத்தியும் செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய போக்குவரத்து துறையும், காவல் துறையும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்றும் ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும் கட்டணங்களை மாற்றியமைக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாறும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் என்றும் கூறினர்.

Related Stories

No stories found.