ஆக.1 முதல் தொழில்நுட்ப கல்வி வகுப்பு தொடக்கம்

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அறிவிப்பு
ஆக.1 முதல் தொழில்நுட்ப கல்வி வகுப்பு தொடக்கம்

2022-23-ம் கல்வியாண்டிற்கான தொழில்நுட்ப கல்வி வகுப்புக்களை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டுமென்றும் முதல்கட்ட கலந்தாய்வை ஜூன் 30-ம் தேதிக்குள் துவக்கி, ஜூலை 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஆன்லைன் அல்லது நேரடி முறையில் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் பேரிடர் காலமாக உள்ளதால், மத்திய அரசின் நடவடிக்கைகளும் வழிகாட்டுதல்களும் வருமானால், இந்த தேதிகளில் மாற்றம் இருக்கலாம் எனவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in