
`0, 12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் அரசு சார்பில் அளிக்கப்படும் நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு 46 ஆயிரத்து 216 மாணவர்களும், ஜே.இ.இ பயிற்சிக்கு 29 ஆயிரத்து 279 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தின விழாவையொட்டி , தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு கேடயங்களையும், கட்டுரை - ஓவியம் - பேச்சுப் போட்டிகளில் வென்ற 180 மாணவ - மாணவியருக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.
இந்த விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பதாகக் கூறினார். இதனை ஈடுசெய்யும் பொருட்டு மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 10, 12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயார் என்றும், ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு சார்பில் அளிக்கப்படும் நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு 46 ஆயிரத்து 216 மாணவர்களும், ஜே.இ.இ பயிற்சிக்கு 29 ஆயிரத்து 279 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!