11,150 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

11,150 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

9831 இரண்டாம் நிலை காவலர்கள், 1200 தீயணைப்பு காவலர்கள், 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 9831 இரண்டாம் நிலை காவலர்கள், 1200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 7.5 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1,13,000 காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிப் பாதுகாத்திட காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை ஆகிய துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு விரைந்து நிரப்பி வருகிறது.

வேளாண்மை - உழவர் நலத் துறையில்  பணி நியமன ஆணை
வேளாண்மை - உழவர் நலத் துறையில் பணி நியமன ஆணை

அந்த வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 9831 இரண்டாம் நிலை காவலர்கள், 1200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 9831 இரண்டாம் நிலை காவலர்களில், 6140 நபர்கள் சிறப்பு காவல் படையிலும், 3691 நபர்கள் ஆயுதப்படையிலும் தேர்வாகியுள்ளனர். இதில் 2948 பெண் காவலர்கள் மற்றும் 3 திருநங்கைகள் ஆகியோரும் அடங்குவர். மேலும், 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் தேர்வாகியுள்ளவர்களில் 12 பெண் சிறைக்காவலர்களும் அடங்குவர்.

இதேபோல், வேளாண்மை - உழவர் நலத் துறையில் 17 தோட்டக்கலை உதவி இயக்குநர், 162 தோட்டக்கலை அலுவலர், 361 வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in