
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,250 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழக மருத்துவத் துறையின் கீழ் கிராம சுகாதார செவிலியர் பணிகளுக்கான 2,250 காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் என்ற இணையத்தில் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வுக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 600 ரூபாய். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PH / DW - ரூ.300 . கூடுதல் விவரங்களுக்கு எம்ஆர்பி இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், http://www.mrb.tn.gov.in/ அல்லது https://mrbofficer.online-ap1.com/village/- என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
சம்பளம்: குறைந்தபட்சமாக ரூ.19,500 முதல் அதிகப்பட்சமாக ரூ.62,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
இதனிடையே செவிலியர் நியமனத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு தமிழக அரசு ஊக்க மதிப்பெண் வழங்கியுள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகள், கொரோனா கேர் மையங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 5 மதிப்பெண், 18 முதல் 24 மாதங்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 4 மதிப்பெண், 12 முதல் 18 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 3 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் பணிக்கு அறிவிப்பு வெளியான நிலையில் ஊக்க மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.