10வது தேர்ச்சியடைந்தவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்... அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணி!

அரசுப் பேருந்துகள்
அரசுப் பேருந்துகள்
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள  ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று மதியம் ஒரு மணி முதல் செப்டம்பர் 18 ம் தேதி மதியம் ஒரு மணி வரையிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.  கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

அரசு போக்குவரத்துக் கழகம்  விழுப்புரம் கோட்டம் தவிர மற்ற கோட்டங்களில் காலியாக உள்ள 812  ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்பவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க ஓட்டுனர் பணிக்கு எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும், கனரக வாகனங்கள் ஓட்ட உரிமம் பெற்று இருக்க வேண்டும். நடத்துனர் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in