ஓபிஎஸ்சிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ எதிர்ப்பு

ஓபிஎஸ்சிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ எதிர்ப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ்சிடம் மருத்துவம் சாந்த கேள்விகள் கேட்க அப்போலோ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்சினை தொடர்பாக ஓபிஎஸ்சிடம் ஆணையம் கேள்வி எழுப்ப முயன்றபோது அப்போலோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சிகிச்சை தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என ஓபிஎஸ் நேற்றே வாக்குமூலம் அளித்த நிலையில் இன்று அது தொடர்பான கேள்விகளை ஆணையம் எழுப்பக்கூடாது என அப்போலோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த ஆணையம் வழக்கறிஞர், ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதி தொடர்பாகவோ, அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துதான் கேள்வி எழுப்பக்கூடாது, வியாதி இருந்தது உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பலாம் என பதில் அளித்தார்.

இதற்கு அப்போலோ தரப்பு வழக்கறிஞர், மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கும்போது முந்தைய சாட்சிகள் கூறிய கருத்துக்களை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, உங்களின் குறுக்கீடு பதிவு செய்யப்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in