
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஷிப்பிங் ஏஜெண்டுகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சமாக பணம் பெற்று அனுமதி வழங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலக அதிகாரிகளிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி அவர்களை சோதனைக்கு உட்படுத்திய பின்பே அவர்களை வெளியே அனுப்பி வருகின்றனர். இந்த சோதனை மாலை 4.30 மணி முதல் நடைபெற்று வருவதாகவும், சோதனை முடிவில் தான் பறிமுதல் செய்யப்பட்டு, கணக்கு விவரங்கள், உள்ளிட்டவை தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.