10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை செய்முறைதுறை தேர்வு நடைபெறும் என்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என்றும் மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் ஜூன் 7ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 23ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மகேஷ் கூறினார்.

Related Stories

No stories found.