பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தது ஏன்? - அண்ணாமலை விளக்கம்!

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தட்டின் அடியில் வைத்து பணம் கொடுக்கும் வீடியோ குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோ என் மண் என் மக்கள் யாத்திரையில் எடுத்த வீடியோ என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்பாளராக பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். அதாவது, தேர்தலில் வெல்வதற்காக போட்டியிடவில்லை என்று கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து, கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், எம்எல்ஏ கோட்டாவில் கல்லூரியில் சீட் வாங்கினார் என்று தவறான தகவலோடு பேசி, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று மழுப்பினார் அண்ணாமலை. அவரின் தேர்தல் வேட்புமனு சர்ச்சையும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது.

பெண்ணுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை
பெண்ணுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை

முக்கியமாக, இந்த தேர்தலில் ஒரு ரூபாய்கூட செலவழிக்க போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். தேர்தலில் பணமே பிரதானம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது, தமிழகத்தில் மிகக்குறைவாக தேர்தல் செலவு செய்த தொகுதியாக கோவையை மாற்றிக் காட்டுகிறேன் என்று பேசியிருந்தார் அண்ணாமலை.

இப்படி பணம் விஷயத்தில் கறார் காட்டிய அவர், தனக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தட்டின் அடியில் வைத்து பணம் கொடுக்கும் வீடியோ, இன்று காலை முதல் சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்திகுமார் பார்வைக்கு சென்றது. இதையடுத்து, அண்ணாமலை பணம் கொடுக்கும் வீடியோ குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஒரு வீடியோவின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, கோவை ஆட்சியர், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவுக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார். அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in