மிக்ஜாம் புயல் எதிரொலி - அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகம்

மிக்ஜாம் புயல் காரணமாக, 9ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த, சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மிக்ஜாம் புயலால் பாதிப்பு
மிக்ஜாம் புயலால் பாதிப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. புயல், கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தொடர்ச்சியாக தள்ளி வைக்கப்பட்டு வந்தன.

அதேபோல், இன்றும், நாளையும் நடைபெற இருந்த தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வரும் 9ம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ரத்து
தேர்வுகள் ரத்து

கனமழை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். எனவே, தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 9ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தேர்வுகளும் மீண்டும் எப்போது நடைபெறும் என்பதும், அதற்கான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in