"முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்" என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் ஆன்லைன் வழியிலான செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது.
இந்நிலையில் முதுகலை பொறியியல் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோருக்கான செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கான அட்டவணை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.