ஆண்களுக்கும் இலவச பேருந்து... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
பொது போக்குவரத்தை ஊக்கப்படுத்த பெண்களுக்கு இலவச பேருந்து வழங்கப்படுவது போல, ஆண்களுக்கும் இலவசபேருந்து பயணத்திற்கு அனுமதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
காலநிலை மாற்றம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், "உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இனி கடுமையான வறட்சி, கடுமையான வெள்ளம், கடுமையான புயல் என அடிக்கடி கேட்கும் மோசமான கால நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கால நிலை மாற்றத்தினால் பெண்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். இளைஞர்கள் மத்தியில் இதைப் பற்றிய புரிதல் இல்லை, அவர்களுக்கு இதை கொண்டு செல்ல வேண்டும் என்பதே பிரதான நோக்கம். காலநிலை மாற்றம் வெள்ளம் மட்டுமல்ல, வறட்சி, பஞ்சம் போன்றவற்றையும் கொண்டு வரும். 2030க்குள் 50% புதுப்பிக்க வல்ல சக்தியை பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதனை செயல்படுத்த வேண்டும்.
அரிசி 12 ரூபாய் விலை ஏற்றம் அடைந்துள்ளது, 3 மாதங்களுக்கு முன்பு குறுவைச் சாகுபடி கருகியதால் இன்று விலையேற்றம் அடைந்துள்ளது. அதற்குக் காரணம் கால நிலை மாற்றம் 75% சாலைகளை கார் ஓட்டுபவர்கள் பயன்படுத்துகிறார்கள். 3,500 அரசுப் பேருந்து உள்ளது. அதனை 8,000 பேருந்துகளாக அதிகரிக்க வேண்டும். இதனால் அதிக பொது மக்கள் பேருந்தைப் பயன்படுத்துவார்கள், மாசுபாடு குறையும். சென்னையில் பெண்களுக்கு இலவசப் பேருந்து போன்று அனைவருக்கும் இலவச பேருந்து சேவை கொண்டு வரவேண்டும். பின்னர் படிப்படியாக வாய்ப்புள்ள இடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
அப்போதுதான் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகும். மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டுக்கு 4,000 பேர் இறக்கும் சூழல் உள்ளது. இதனைத் தவிர்க்கத் தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் 870 பூங்காக்கள் உள்ளன. 95% பூங்காக்கள் சிறிய அளவிலான பூங்காவாக உள்ளது. சென்னையில் 100 ஏக்கர் பூங்காக்கள் 4 தொடங்க வேண்டும். ஏர்போட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!
பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!
கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!
அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!