ஈபிஎஸ் காரில் ஏற முயன்ற உதயநிதி: கலாய்த்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஈபிஎஸ் காரில் ஏற முயன்ற உதயநிதி: கலாய்த்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காரில் தவறுதலாக ஏற முயன்றதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூற, "இப்படியே போனால், பக்கத்தில் இருப்பது யார் என்று கூட தெரியாமல், பேசிக்கொண்டே போக வேண்டியது தான்" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிரித்துக் கொண்ட சொன்ன வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தினந்தோறும் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த கூட்டம் முடிந்த நிலையில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்து செல்ல தலைமை செயலக வளாகத்தில் அவர்களின் கார்கள் தயாராக நிற்பது வழக்கம்.

கடந்த 12-ம் தேதி கூட்டம் முடிந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய கார் என்று நினைத்து தவறுதலாக, அங்கு நின்றிருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார். சட்டென அவரது உதவியாளர் அதைச்சுட்டிக்காட்டவும் சுதாரித்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி தனது காருக்குப் போனார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. அதே போல மற்றொரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் சட்டப்பேரவை வெளியே பேசிக் கொண்டு வருகின்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின், " மூன்று நாட்களுக்கு முன்பு, இப்படித்தான் நானும் எடப்பாடி பழனிசாமி காரில் ஏற பார்த்தேன். காரின் முகப்பில் ஜெயலலிதா போட்டோ இருப்பதை பார்த்ததுமே சுதாரித்து கொண்டேன்" என்கிறார். இதை கேட்டதும் அமைச்சர் அன்பில் மகேஷ், "இப்படியே போனால், பக்கத்தில் இருப்பது யார் என்று கூட தெரியாமல், பேசிக்கொண்டே போக வேண்டியது தான்" என்று காமெடியாக சொன்னார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரின் கார்களும் ஒரே மாதிரி இருப்பது தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in