தமிழ் எழுத்துகளில் உருவான ஓவியம் வைரல்!- காஞ்சிபுரம் இளைஞருக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!

தமிழ் எழுத்துகளில் உருவான ஓவியம் வைரல்!- காஞ்சிபுரம் இளைஞருக்கு  ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!
ஆனந்த் மஹிந்திரா ஓவியம்

தமிழ் எழுத்துகளைக் கொண்டு வரையப்பட்ட ஓவியம் ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அந்த ஓவியத்தை தன்னுடைய வீட்டில் வைக்க இருப்பதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்திருக்கிறார்.

காஞ்சிபுரம் அடுத்துள்ள பொன்னேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். சிவில் பிரிவில் டிப்ளமா படித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்த கணேஷ், நண்பர்கள், உறவினர்கள் என தன்னுடன் பழகுபவர்களின் ஓவியங்களை வரைந்துகொடுப்பார். ஓவியத்தின் மீது கொண்ட காதலால் ஓய்வு நேரங்களில், பென்சில் வரைவு ஓவியங்களை வரைந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவின் ஓவியத்தை வரைந்துள்ளார். மேலும் இந்த ஓவியத்தை சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தார். ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஓவியத்தை இணைத்திருந்தார். இந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து ஆனந்த் மகேந்திரா, "ஆஹா, என் உருவப் படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானதைக் கண்டு , நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டும், ஓவியத்தை உருவாக்கியவரின் பாராட்டாகவும் , என் வீட்டில் இந்த ஓவியத்தை நான் வைக்க விரும்புகிறேன்” என ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து புகைப்படத்தை வரைந்த கணேஷ் , மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் தற்போது வரை பயன்படுத்தும், தமிழ் எழுத்துக்கள் 247 மற்றும் தமிழ் வட்டெழுத்துக்கள் உள்ளிட்ட 741 எழுத்துக்களால் இந்த புகைப்படத்தை உருவாக்கியுள்ளேன். இதை ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், எனக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in