மருத்துவப் படிப்புக்கான ஒதுக்கீட்டு இடங்கள் நிறுத்திவைப்பு

மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு
மருத்துவப் படிப்புக்கான ஒதுக்கீட்டு இடங்கள் நிறுத்திவைப்பு

மருத்துவ படிப்புக்கான இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வில் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மருத்துவகல்வி இயக்குநரகம், சரி செய்யப்பட்ட ஒதுக்கீடு பட்டியல் மீண்டும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349 இடங்களும், அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகளில் 2,650 இடங்கள் என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அதேபோல் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இருக்கும் 1,930 பி.டி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு, கடந்த ஜனவரி 27-ம் தேதி முதல் தொடங்கி, மருத்துவ மாணவர்களுக்கான ஒதுக்கீடு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜனவரி 30-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் நடைபெறுகிறது.

இவற்றில் முதல் கட்ட கலந்தாய்வுகள் நிறைவடைந்து 2022-23-ம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவப் படிப்புக்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தற்போதும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், கலந்தாய்வில் அரசு இடங்களுக்கான ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுப்படிகளை சரி செய்யும் விதமாக, ஒதுக்கீடு செய்யப்படும் சரி செய்யப்பட்ட பட்டியல் 15.03.2022 அன்று மீண்டும் புதிதாக வெளியிடப்படும் என்றும், அதே போல் 14.03.2022 அன்று வெளியிடப்பட்ட, மருத்துவ மாணவருக்கான ஒதுக்கீடு செய்யபட்ட பட்டியலை திரும்ப பெறப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் நடைபெற்று வரும் கலந்தாய்வில், குறைவான மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள், சென்னை உட்பட பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகளில், இடஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவ மாணவருக்கான சரி செய்யப்பட்ட ஒதுக்கீடு பட்டியல் இணையத்தில் வெளியிடப்படும் என மருத்துவக்கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in