இவை அனைத்தும் இனி முக்கியம்: ராதாகிருஷ்ணனின் கரோனா அலர்ட்

இவை அனைத்தும் இனி முக்கியம்: ராதாகிருஷ்ணனின் கரோனா அலர்ட்

கரோனா மீண்டும் அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், இந்த மாநிலங்கள் பரிசோதனைகளை அதிகப்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் 25க்கு கீழ் இருந்த தினசரி கரோனா பாதிப்பு லேசாக உயர்ந்து தற்போது 30க்கு மேல் பதிவாகி வருகிறது. பொதுஇடங்கள், கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட கரோனா பாதிப்பு நடைமுறைகளை ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும். டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் கரோனா மீண்டும் அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in