மிக முக்கிய அறிவிப்பு... தமிழ்நாட்டில் 1,126 திரையரங்குகளிலும் நாளை காட்சிகள் ரத்து!

மிக முக்கிய அறிவிப்பு... தமிழ்நாட்டில் 1,126  திரையரங்குகளிலும் நாளை காட்சிகள் ரத்து!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 1,126 திரையரங்கிலும் நாளை (ஏப்.19) காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாளை(ஏப்.19) தேர்தல் நடைபெறுகிறது. இந்த நாளில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அத்துடன் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படடுள்ளது.

மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல்

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் காட்சிகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன

இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்," மக்களவைத் தேர்தலையொட்டி நாளை (ஏப்.19) திரையரங்குகளில் 4 காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக காலை, மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது. அரசு தேர்தலுக்காக ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

எனவே திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒரு நாள் முழுவதும் நான்கு காட்சிகளை ரத்து செய்ய அதிகாரப்பூர்வமாக முடிவு எடுத்து அறிவித்துள்ளது. 2 காட்சிகள் மட்டுமே ரத்து செய்வதின் மூலமாக ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் அவர்கள் தான் எதிர்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் 1,126 திரையரங்குகள் உள்ளன. இந்த அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in