பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு

பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு

தமிழக பட்ஜெட் உரையை புறக்கணித்துவிட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய வந்தார். அப்போது, அதிமுக உறுப்பினர்கள், எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதை கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதி காக்கும்படி சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் பின்னர் அவர்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்தார்.

Related Stories

No stories found.